தமிழகத்தின் மேற்கு கடற் கரையில் மீன்பிடி தடைக்காலம் : ஜூன் 1ஆம் தேதி முதல் 60 நாட்கள் மீன்பிடிக்க தடை

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலானதை ஒட்டி, விசைப் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.

Update: 2019-05-31 09:35 GMT
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலானதை ஒட்டி, விசைப் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக பகுதிகளில் உள்ள வங்கக் கடல் பகுதியில் மீன் இனப் பெருக்க காலத்தை முன்னிட்டு, மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதேபோல், தமிழகத்தில் உள்ள மேற்கு கடல் பகுதியான, குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், நீண்டகரை முதல் கேரள மாநிலம் விழிஞ்ஞம், கொல்லம், கொச்சி, எர்ணாகுளம் பகுதிகளில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலாகிறது. இதனால், விசைப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான படகுகள் கேரள மாநிலம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த அறுபது நாள் தடை காலத்தை பயன்படுத்தி, படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பராமரிக்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்