தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை : கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழை காரணமாக ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, அதிலிருந்து 720 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகாரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 720 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மொத்தக் கொள்ளளவான 44 புள்ளி இரண்டு எட்டு அடியில், தற்போது 41 புள்ளி ஒன்பது எட்டு அடி நீர்மட்டம் உள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 720 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தொரப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஒடுகிறது. மழை தொடரும் பட்சத்தில், அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகாரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.