தி.மு.க. வெற்றியால் சட்டமன்ற அலுவலகத்தை காலி செய்த அ.தி.மு.க
ஆண்டிப்பட்டி தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதால் 20 ஆண்டுகளாக தங்கள் வசம் இருந்த சட்டமன்ற அலுவலகத்தை அ.தி.மு.க வினர் காலி செய்தனர்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதால், 20 ஆண்டுகளாக தங்கள் வசம் இருந்த சட்டமன்ற அலுவலகத்தை அ.தி.மு.க வினர் காலி செய்தனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என 2 முதல்-
அமைச்சர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிப்பட்டி தொகுதியை கடந்த 2001 முதல் அ.தி.மு.க தொடர்ந்து தக்கவைத்திருந்தது. தற்போது நடந்த இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் மகாராஜன் வெற்றி பெற்றதையடுத்து தொகுதி அலுவலகத்தை அ.தி.மு.க. காலி செய்தது.ஜெயலலிதா எம்.ஜி.ஆர். படங்கள் உள்ளிட்டவற்றை அதிமுகவினர் எடுத்துச் சென்றனர்.