அமெரிக்கா - சீனா வர்த்தக போர் : திருப்பூருக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகள்

அமெரிக்கா - சீனா வர்த்தக போர் காரணமாக, திருப்பூர் நகரத்துக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

Update: 2019-05-30 11:54 GMT
அமெரிக்கா - சீனா  வர்த்தக போர் காரணமாக, திருப்பூர் நகரத்துக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு 25 சதவீதம் கூடுதல் வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதன்  காரணமாக சீன ஆடைகளை இறக்குமதி செய்வதை காட்டிலும் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க வர்த்தகர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில்,  அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யும் திருப்பூர் நகரத்துக்கு புதிய வாய்ப்புகள் உருவாக உள்ளன.  ஆனால்  பின்னலாடை உற்பத்தியை அதிகரிக்க  உட்கட்டமைப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு வசதிகள் இல்லாததால் புதிய வாய்ப்புகளை இழக்கும் நிலை உள்ளதாகவும், உடனடியாக அவற்றை ஏற்படுத்த வேண்டும் என்றும்  பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்