ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டம் : அதிகாரிகளின் திடீர் உத்தரவு நகலுக்கு எதிர்ப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த இருங்களூரில் வேறு தேதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த இருங்களூரில் வேறு தேதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த அதிகாரிகள் திடீரென வழங்கிய உத்தரவு நகலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள், மாற்று தேதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். 15 லட்சத்திற்கும் மேல் செலவுசெய்து விழா நடத்த அனைத்து ஏற்பாடுகளும் இருங்களூரில் தயார்நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.