விநாயகர் சிலையை கொள்ளையடித்த மர்ம நபர்கள்
கோவை சரவணம்பட்டி பகுதியில் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் முன்புறம் உள்ள அரச மரத்தின் அடியில் இருந்த 2 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். வழக்கம் போல் காலை கோயிலுக்கு வந்து பூசாரி பார்த்த போது விநாயகர் நிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றது பக்தர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.