தாமிரபரணி ஆறு வறண்டது - அமலைச் செடிகளை அப்புறப்படுத்த கோரிக்கை
நெல்லை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க சேரன்மகாதேவி, சீவலப்பேரி போன்ற பகுதிகளில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க சேரன்மகாதேவி, சீவலப்பேரி போன்ற பகுதிகளில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து எடுக்கப்படும் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு மாவட்ட மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆறு வறண்டுள்ளதால், உறை கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத நிலையில், கிணறுகளை சுற்றி மணல்மேடுகள் அதிகரித்து அமலைச் செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் அதிகரிக்கும் சூழல் ஏற்படும் என அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.