குடிநீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்

குடிநீர் பஞ்சத்தை போக்க அதிமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2019-05-28 17:22 GMT
தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் "ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய்"க்கு வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.சென்னைக்கு நீர் ஆதாரங்களாக திகழும் ஏரிகளை ஆழப்படுத்தாமலும்,  தண்ணீரை சேமித்து வைக்காததாலும் ஏரிகள் வறண்டு கிடப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணா நதி நீரை பெற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ள அவர், காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெற முயற்சிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றியிருந்தால் தண்ணீர் பற்றாக்குறையை ஓரளவு சமாளித்திருக்க முடியும் என கூறியுள்ள அவர்,குடிநீர் பஞ்சத்தை போக்க அதிமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.திமுக எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தாய்மார்களின் தாகத்தை தீர்க்க டேங்கர் லாரிகள் மூலம் குடிதண்ணீர் வழங்க முன்வர வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்