ஓசூரில் வறண்டு போன ஏரி, குளங்கள் : கால்நடைப் பண்ணையில், பறவைகள் தஞ்சம்...

வழக்கமான குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்காக ஓசூருக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள், உணவு தேடி கால்நடை பண்ணையில் தஞ்சமடைந்துள்ளன.

Update: 2019-05-27 09:19 GMT
வழக்கமான குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்காக ஓசூருக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள், உணவு தேடி கால்நடை பண்ணையில் தஞ்சமடைந்துள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்தும், சீதோஷ்ண நிலை மற்றும் இனப் பெருக்கத்துக்காக பறவைகள் ஓசூர் வருவது வழக்கம். இதேபோல், தற்போதும் பறவைகள் ஓசூர் வந்துள்ளன. ஆனால், போதிய மழையின்றி ஓசூரில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டுள்ளன. பசுமை இன்றி அனைத்து இடங்களும் காய்ந்துள்ளன. இதனால், ஏமாற்றமடைந்த பறவைகள், மத்திகிரியில், ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பில் உள்ள கால்நடைப் பண்ணையில் தஞ்சம் அடைந்துள்ளன. அங்கு, மாடுகளுக்காக தண்ணீர் மூலம் பசுமையாக புல்வெளிகள், பராமரிக்கப்படுகின்றன. பசுமை துளிர்க்கும் அங்கு பறவைகள் உணவு தேடி தஞ்சம் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்