ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் போராட்டம்
ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதை கண்டித்து பூந்தமல்லியில் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லியை அடுத்த பானவேடுதோட்டம் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கள் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பாதிக்கப்படுவாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். இந்த நிலையில் இன்று தண்ணீர் லாரிகளை சிறைபிடித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.