மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் : நாடாளுமன்ற குழு தலைவர் பதவி யாருக்கு?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக புதிய எம்பிக்கள் கூட்டம் சென்னையில் மாலையில் நடைபெறகிறது.

Update: 2019-05-25 08:08 GMT
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக புதிய எம்பிக்கள் கூட்டம் சென்னையில் மாலையில் நடைபெறகிறது. அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு கூடும் இந்த கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 23 உறுப்பினர்களும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 எம்எல்ஏக்களும் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக, ஈரோடு - கணேசமூர்த்தி, பெரம்பலூர் - பச்சமுத்து, விழுப்புரம் - ரவிக்குமார், நாமக்கல் - சின்ராஜ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் பதவி யாருக்கு? என்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்த பதவியை பிடிக்க மூத்த த லைவர் டி.ஆர். பாலு  - கனிமொழி இடையே போட்டி உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, தேசிய அளவில் 3- வது பெரிய கட்சியாக உருவாகி உள்ள திமுகவுக்கு, மக்களவை துணை சபாநாயகர் பதவி கொடுக்க முன்வந்தால், ஏற்றுக்கொள்வதா? என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்