முதல்வர் , துணை முதல்வர் டெல்லி பயணம் : மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா?
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் மாலையில் கூடும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும்,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் தலைநகர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் மாலையில் கூடும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் தலைநகர் புறப்பட்டு சென்றுள்ளனர். சென்னையில் இருந்து காலை 9.55 மணி விமானத்தில் இரு தலைவர்களும் டெல்லி புறப்பட்டனர். இவர்களுடன் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரும் டெல்லி சென்றார். மாலை 5 மணி அளவில் டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்கிறார்கள். பாஜக கூட்டணியில், தேனியில் இருந்து ஒரே ஒரு எம்பி மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளதால், மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இதற்கு பிரதமர் மோடி ஒப்புக்கொண்டால், ரவீந்திரநாத் குமார், மத்திய அமைச்சராக பதவி ஏற்க அதிக வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.