அதிமுகவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் விழிப்புடன் பணியாற்ற முகவர்களுக்கு வேண்டுகோள் - ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கூட்டாக அறிக்கை
அதிமுகவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் விழிப்புடன் பணியாற்றுமாறு வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அக்கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையா உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும், பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒன்றாக உள்ளனவா என்பதை முகவர்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் தோழமை கட்சிகளின் முகவர்கள், அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே வெளியில் வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.