அங்கீகார கட்டணம் செலுத்தாததால் 121 ஆசிரியர் கல்வியியல் மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் - பல்கலைக்கழகம் நடவடிக்கை

அங்கீகார கட்டணம் செலுத்தாததால்121 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2019-05-21 10:11 GMT
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, ஆசிரியர் பல்கலைக் கழகத்திடம் அங்கீகாரம் பெற வேண்டும்.ஆனால், பல ஆண்டுகளாக 121 கல்வியியல் கல்லூரிகள் ஆறு லட்சம் முதல் ஏழு லட்சம் ரூபாய் அளவில் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது.நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்துவதற்காக, இந்த கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு கடந்த 5ஆம் தேதியுடன் முடிந்தது. ஆனால் தற்போது வரை அங்கீகார கட்டணம் செலுத்தப்படாத, 121 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பல்கலைக்கழகம் அனுமதி வழங்காது என தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்