குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் : தனியார் பேருந்து பொதுமக்களால் சிறைபிடிப்பு

பவானி அருகே குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை கண்டித்து பொதுமக்கள் தனியார் பேருந்தை சிறைபிடித்தனர்.

Update: 2019-05-20 21:21 GMT
பவானி அருகே குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை கண்டித்து பொதுமக்கள் தனியார் பேருந்தை சிறைபிடித்தனர். ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்து  தாறு மாறாக சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சித்தோடு அருகே பேருந்து வந்த போது அதனை சிறைபிடித்தனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணையில் பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பேருந்து ஓட்டுநரை எச்சரித்து அனுப்பினர்.
Tags:    

மேலும் செய்திகள்