"தமிழகத்தில், 4038 சதுர கி.மீ. பரப்பில் மீத்தேன் திட்டம்"

தமிழகத்தில் நான்காயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் மீத்தேன் எடுக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது தெரிந்தும் முதலமைச்சர் மவுனமாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் ஜெயராமன் வேதனை தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-20 05:30 GMT
தமிழகத்தில் நான்காயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் மீத்தேன் எடுக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது தெரிந்தும் முதலமைச்சர் மவுனமாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் ஜெயராமன் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினரின் கூட்டம் நடைபெற்றது. அதில், பூமிக்கு அடியில் நீரியல் விரிசல் முறையில் பாறைகளை உடைக்க ஒருகோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றும், தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நேரத்தில் இந்த திட்டத்தை அரசு அனுமதிக்க கூடாது என்றும் கூறப்பட்டது.  ஓ.என்.ஜி.சி. அமைத்த அனைத்து கிணறுகளையும், ஒரே உரிமம் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் கிணறுகளாக மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும்,  உடனடியாக தமிழக அரசு இத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீத்தேன், ஷேல் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களுக்கு விவசாயிகளிடம் நிலம் பறிக்கப்பட உள்ளதாகவும், அதை எதிர்த்து நிலம் கொடுக்க மறுக்கும் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டங்களை தடுத்து நிறுத்த எம்.பி, எம்.எல்.ஏக்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் குரல் எழுப்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால், அவர்களது வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ​பேராசிரியர் ஜெயராமன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்