கும்பகோணம் : விசாரணை அதிகாரியை அறையில் வைத்து பூட்டிய ஊழியர்கள் - இரவில் நடந்த போராட்டத்தால் பரபரப்பு

கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் விசாரணை அதிகாரியை உள்ளே வைத்து பூட்டி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-05-18 01:53 GMT
கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் விசாரணை அதிகாரியை உள்ளே வைத்து பூட்டி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கும்பகோணம் நகராட்சியில் பணியாற்றி வந்த மேலாளர் குமரிமன்னன் என்பவர் ஊழியர் விரோத போக்கில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த அதிகாரி ஒருவர் அலுவலகத்திற்கு வந்தார். இரவு 9.30 வரை தொடர்ந்த இந்த விசாரணையின் போது நேர்மையாக விசாரணை நடைபெறவில்லை எனக் கூறி ஊழியர்கள், விசாரணை அதிகாரியை உள்ளே வைத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்