கமல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்க : உதவி தேர்தல் அலுவலரிடம் பா.ஜ.க. இந்து முன்னணி மனு

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரவக்குறிச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இந்து முன்னணியினர் மனு அளித்துள்ளனர்.

Update: 2019-05-14 19:07 GMT
பிரசாரத்தின் போது இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய  வலியுறுத்தி அரவக்குறிச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், கமல்ஹாசன் இந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதால் அவரது கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்