"43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகள் மட்டும் எண்ணப்படும்" - சத்ய பிரதா சாகு
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டு வாக்குகளை எண்ண வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டு வாக்குகளை எண்ண வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, மறுவாக்குப்பதிவு கோரிய எஞ்சிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
ஆலோசனை
தமிழகத்தில், வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 45 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கபட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.