விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி : கிணறு தூர்வாரும் போது நடந்த சோகம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, கிணற்றை தூர்வாரும் போது விஷ வாயு தாக்கியதில் வடிவேல் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, கிணற்றை தூர்வாரும் போது விஷ வாயு தாக்கியதில் வடிவேல் என்ற தொழிலாளி உயிரிழந்தார். பன்னீர் என்பவரது வீட்டில் உள்ள கிணற்றை தூர்வாருவதற்காக, வடிவேல் மற்றும் அவருடன் 2 பேர் சென்றுள்ளனர். முதலில் இறங்கிய வடிவேல் 30 அடி ஆழமுள்ள அந்த கிணற்றின், பாதி தூரம் தாண்டுவதற்குள் மூச்சடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். உடனிருந்தவர்கள் வடிவேலை காப்பாற்ற முயற்சித்த போது, பாரத் என்பவரும் மூச்சுத்திணறி மயக்கமடைந்தார். இந்நிலையில் வடிவேலு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பாரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்