தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினை : சுகாதாரமற்ற நீரை குடிக்கும் அவலம்
சிவகங்கை அருகே நிலவும் கடும் வறட்சியால், வேறு வழியின்றி சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இளையான்குடி கிராமத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வானம் பார்த்த பூமியான இங்கு, மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஏரி, குளங்கள், கிணறுகள் வறண்டு கிடக்கிறது. 500 அடி ஆழம் போர் போட்டும் துளி கூட தண்ணீரை பார்க்க முடியாத அளவிற்கு நீர்வளம் குறைந்துள்ளது. மற்றொரு புறம், டேங்கர் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் நீரும், புழு, பூச்சிகளோடு, கலங்களாக சுகாதாரமற்று இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வேறுவழியின்றி சுகாதாரமற்ற நீரை குடிப்பதாக கூறிய இளையான்குடிவாசிகள், தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.