ரூ.4.84 கோடி நகைகள் மாயமான விவகாரம் : நகைகளுடன் மாயமானதாக கூறப்பட்டவர்கள் உயிரிழப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் மாயமான விவகாரத்தில், ஊழியர்கள் மூன்று பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2019-05-05 06:51 GMT
புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அண்மையில் நகைகள் காணாமல் போயின. இந்த விவகாரத்தில், வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த திருக்கட்டளையை சேர்ந்த மாரிமுத்து கடந்த 6  நாட்களுக்கு முன்பு நகைகளுடன் மாயமானதாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று மாரிமுத்துவின் உடல் மணமேல்குடி- கோடியக்கரை கடற்கரையில் ஒதுங்கியது. இதைத் தொடர்ந்து, 4  கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான பதிமூன்றே முக்கால் கிலோ தங்க நகைகளை காணாமல் போயிருப்பதாக நகர காவல் நிலையத்தில், வங்கியின் முதுநிலை மேலாளர் மாரீஸ் கண்ணன் புகாரளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நகைகள் மாயமான விவகாரத்தில் வங்கி ஊழியர்கள் 3 பேரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்