மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமி உயிரிழப்பு : கொலை வழக்காக பதிவு செய்ய கோரிக்கை
லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்த பழனிசாமி இறந்து போனதை கொலை வழக்காக பதிவு செய்ய கோரி அவரது உறவினர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை உருமாண்டம்பாளையம் பகுதியைசேர்ந்த பழனிசாமி லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்தார். அவரிடம் வருமானவரித்துறையினர் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். பின்னர் வீடு திரும்பிய பழனிசாமி காரமடை அருகேயுள்ள குளத்தில் பிணமாக கிடந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ள உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பழனிசாமி இறந்து போனதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.கோவை அரசு மருத்துவமனையில் தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும் என்று கூறிய போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.