மின் கோபுரத்தில் ஏறி ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்...

மதுரை கே.புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில், பேருந்து ஓட்டுநர் 50 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-05-02 14:27 GMT
மதுரை புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில்  ஓட்டுநராக பணியாற்றி வருபவர், பாலசுப்பிரமணி.  இவர் 13 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்ற நிலையில் அதற்காக உரிய அனுமதிக்கடிதத்தையும் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், மருத்துவ விடுப்பு கடிதம் கொடுத்தும் அவர்  மீது அதிகாரிகள் விடுப்பு எடுத்ததாக கூறி சம்பள பிடித்த நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிமனைக்கு உள்ளே இருந்த  50 அடி உயரம் கொண்ட  மின்விளக்கு கோபுரத்தில் ஏறி, பாலசுப்பிரமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனிடையே, பாலசுப்ரமணியனிடம், காவல் மற்றும் தீயணைப்பு துறையினர், போக்குவரத்து கழக மேலாளர் நடராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர் கீழே இறங்கி வந்தார். கே.புதூர் பணிமனையில், கடந்த 5 மாதங்களாக, விடுமுறை அளிக்கப்படாமல், சம்பளப்பிடித்தம் செய்யப்படுவதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்