ஃபானி புயல் தாக்கும் ஆபத்து : தமிழகத்துக்கு ரூ.309 கோடி நிதிஒதுக்கீடு

ஃபானி புயலால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழகம், ஆந்திரம், ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு ஆயிரத்து 86 கோடி ரூபாய் நிதியை முன்கூட்டியே விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-30 09:23 GMT
ஃபானி புயலால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழகம், ஆந்திரம், ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு ஆயிரத்து 86 கோடி ரூபாய் நிதியை முன்கூட்டியே விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஃபானி புயல் அதிதீவிரம் அடைந்து ஒடிசா மாநிலத்தில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், புயல் சேத தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, சம்மந்தப்பட்ட மாநில பேரிடர் மேலாண்மை நிதிக்கு இந்த தொகை ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்துக்கு 309 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்