புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது - தமிழக வருவாய் நிர்வாக ஆணையர்

தமிழகத்தை புயல் தாக்கும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்ய கோபால் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-27 02:04 GMT
தமிழகத்தை புயல் தாக்கும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்ய கோபால் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்கள் ஞாயிற்றுக் கிழமைக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டினார். தலைமை செயலாளர் தலைமையில் நடந்த அனைத்து துறை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், புயலை எதிர்கொள்ள அதிக ஊழியர்களை நியமித்து 24 மணி நேரம் செயல்பட முடிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.  முகாம்கள் மற்றும் 30 ஆயிரம் நபர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். தேவையில்லாமல் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், எந்த தகவலானாலும் அரசு முன்கூட்டியே உங்களுக்கு   தரும் என சத்ய கோபால் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்