உருட்டு கட்டையால் அடித்து ஒருவர் கொலை

சேலத்தில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-04-23 08:26 GMT
சேலத்தில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அம்மாப்பேட்டை அருகே உள்ள பாபுநகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆறுமுகம்.  இவருக்கு மாதம்மாள் மற்றும் பெருமாயி என்று இரண்டு மனைவிகள். அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ஆறுமுகம் தனியாக வசித்து வந்தார். 

இந்நிலையில், நேற்று ஆறுமுகம் மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டில் உள்ள முரளி என்பவரின் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முரளி மூன்று பேருடன் சேர்ந்து ஆறுமுகத்தை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த   அம்மாபேட்டை போலீசார்  ஆறுமுகத்தின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுகத்தை கொலை செய்த முரளி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்யதனர்.  
Tags:    

மேலும் செய்திகள்