"காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது" - ப.சிதம்பரம்
காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மாநில மக்களின் விருப்பத்தையும், உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா? அல்லது தன் முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில், அவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். நீட்' தேர்வு பற்றி இரண்டு அணிகளின் நிலைப்பாடுகள் தெளிவாகத் தெரிந்து விட்டன என்றும், யாருக்கு வாக்களிப்பது என்று மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது எளிதாகி விட்டதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது என்று தெரிவித்துள்ள அவர், பாஜக அரசு அமைந்தால் 'நீட' தேர்வு தொடர்ந்து இருக்கும் என்றும், இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18 எனவும், ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.