நதிகளை பராமரிக்க தவறியதாக தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் : உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

கூவம், அடையாறு உள்ளிட்ட நதிகளை பராமரிக்க தவறியதாக தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Update: 2019-04-09 22:06 GMT
சென்னையில் ஓடும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாகம், 
இதனால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட்டதீக கூறி ஜவஹர்லால் சண்முகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த  தேசிய பசுமைத்தீர்ப்பாயம் தமிழக பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. வரும் ஏப்ரல் 23-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று  தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்ட  தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் ஆணையிட்டது. 100 கோடி ரூபாய் அபராத உத்தரவை எதிர்த்து  தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு வந்த போது, கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமலும், கூவம் நதியை சுத்தப்படுத்த 604 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதை கருத்தில் கொள்ளாமலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதிகள், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மனுவுக்கு பதிலளிக்க பசுமைத்தீர்ப்பாயத்துக்கும், வழக்கு தொடர்ந்த ஜவகர்லால் சண்முகத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்