கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி : வதந்தி பரப்பிய நபர் மீது வழக்கு பதிவு
கோவை டீத்தூள் கொண்டுசென்ற கண்டெயினர் லாரியில்,பணம் இருப்பதாக வதந்தி பரப்பிய மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர் மீது வழக்கு பதவி செய்யப்பட்டுள்ளது.
நேற்றிரவு கோவை ஆத்துப்பாலம் டோல்கேட் அருகே சமுகமது சாஜித், கண்டெய்னர் லாரி ஓட்டுனரை வழிமறித்து லாரியில் பணம் இருப்பதாக மிரட்டியுள்ளனர். பொதுமக்களிடையே தவறான தகவலைப் பரப்பியதன் காரணத்தினால், சட்ட ஒழுங்கு பாதிக்கும் அளவில் செயல்பட்ட அவர் மீது 6 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சமந்தப்பட்ட மற்ற நபர்களை போலீசார் தேடி வரும் நிலையில், தகவலறிந்து அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடியதால், சுமார் நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.