"பாஜக தேர்தல் அறிக்கை நகைப்புக்குரியதாக உள்ளது" - மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு

பாஜக தேர்தல் அறிக்கை நகைப்புக்குரியதாக உள்ளதாக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-09 21:38 GMT
பாஜக தேர்தல் அறிக்கை நகைப்புக்குரியதாக உள்ளதாக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மண்ணடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், கங்கை நதியை புனிதமாக்குவோம் என கூறிய பாஜக, அதனை நிறைவேற்றவில்லை என்று கூறினார். திமுக, காங்கிரஸ் கட்சிகள் கொள்கை அளவில் ஒத்து போவதாகவும் தெரிவித்தார். ஆயிரம் கோடி செலவில் சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்