அதிமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான திட்டங்கள் : பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு
தர்மபுரி மாவட்டம் தேங்காய் மரத்துப்பட்டி அதியமான் கோட்டை பகுதிகளில் பாமக வேட்பாளர அன்புமணிக்கு ஆதரவாக, பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.
தர்மபுரி மாவட்டம் தேங்காய் மரத்துப்பட்டி அதியமான் கோட்டை பகுதிகளில் பாமக வேட்பாளர அன்புமணிக்கு ஆதரவாக, பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், பாமக நடத்திய போராட்டங்களால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறியதாகவும் கிராமங்கள் வரை குடிநீர் கிடைப்பதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். அதிமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான திட்டங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி அளித்து, அவர்கள் பெரிய அளவில் அரசு பணிகளுக்கு வர வேண்டும் எனவும் ராமதாஸ் தெரிவித்தார். இந்த பிரசார கூட்டத்தில் அமைச்சர் கேபி அன்பழகன், பாமக தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.