சதுரகிரி கோயிலுக்கு செல்வோருக்கு அடிப்படை வசதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு நேற்று முதல், பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2019-04-04 12:07 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு நேற்று முதல்,  பக்தர்கள்   செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் வழியில் குடிநீர் ,கழிவறை உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை என பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் கோயில் பகுதியில் உள்ள ஏழுக்கும்  மேற்பட்ட அன்னதான  கூடம் மூடப்பட்டு உள்ளதால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும்,  கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்