திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரிகள் இரவில் செல்ல தடை

வாகனங்களுக்கு இரவில் செல்ல தடை விதித்ததை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-03-30 11:58 GMT
சத்தியமங்கலம் திம்பம் மலைப் பாதையில், வாகனங்களுக்கு இரவில் செல்ல தடை விதித்ததை கண்டித்து முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட  முயன்ற 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் மலைப்பாதையில் விபத்து ஏற்படுவதாக கூறி  மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதை வழியாக கனரக சரக்கு லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசனூர் மாவட்ட வன அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் போராட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்