கடலில் 30 கிலோ மீட்டர் நீந்தி கடந்த சிறுவன் - தலைமன்னார் தனுஷ்கோடி நீந்தி சாதித்த சிறுவன்
பத்து வயது சிறுவன் ஒருவன் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை கடலில் 30 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்துள்ளான்.
தேனி மாவட்டம் அல்லி நகரை சேர்ந்த ரவிக்குமார், தாரணி தம்பதியின் மகன் ஜெய் ஜஸ்வந்த். நீச்சல் போட்டிகளில் அதீத ஆர்வம் கொண்ட ஜஸ்வந்த், தனது 7 வயதிலே மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார்.இந்நிலையில், பெரிதாக சாதிக்க நினைத்த ஜஸ்வந்த்,இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக் ஜல சந்தியில் கடலில் நீந்த திட்டமிட்டார்.அதன்படி, ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் தலைமன்னார் சென்ற அவர், அதிகாலையில் நீச்சல் பயணத்தை தொடங்கி, பிற்பகல் 2.30 மணிக்கு தனுஷ்கோடியின் அரிச்சல் முனை பகுதிக்கு வந்து சேர்ந்தார்.அவரை டி.ஜி.பி சைலேந்திரபாபு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.தனுஷ்கோடியில் இருந்த சுற்றுலா பயணிகளும், கரகோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர்.இதனை தொடர்ந்து, கடலோர காவல்படை வீரர்கள், மாணவனின் சாதனையை பாராட்டி, சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.