வஃக்பு வாரியம் தொடர்ந்த வழக்கு - சி.பி.ஜ. விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த வாரம் சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய தலைமையகத்தில் சி.பி.ஐ. சோதனை நடந்தது.இந்நிலையில், இந்த சோதனை தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, வக்ஃபு வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.