பாலியல் வன்கொடுமையில் கொலையான சிறுமியின் உடலை பெற பெற்றோர் ஒப்புதல்

4 பேர் பிடிக்கப்பட்டிருப்பதால், கோவையில் பாலியல் வன்கொடுமையால் கொலையான சிறுமியின் உடலை பெற்றுக் கொள்ள 21 மணி நேரத்துக்கு பிறகு பெற்றோர் சம்மதித்துள்ளனர்.

Update: 2019-03-28 05:30 GMT
4 பேர் பிடிக்கப்பட்டிருப்பதால், கோவையில் பாலியல் வன்கொடுமையால் கொலையான சிறுமியின் உடலை பெற்றுக் கொள்ள 21 மணி நேரத்துக்கு பிறகு பெற்றோர் சம்மதித்துள்ளனர். கோவை மாவட்டம் பன்னிமடை அருகே தெருவில் விளையாடி  கொண்டிருந்த‌ சிறுமியை மர்மநபர்கள் கடத்திச்சென்று வன்கொடுமை செய்து கொலை செய்தனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் தெருவில் கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், 4 பேர் மீது சந்தேகம் தெரிவித்த பெற்றோர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர். இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சதீஷ், சந்தோஷ், துரை, விஜயகுமார் ஆகிய 4 பேரை பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை சான்றுடன் காண்பித்த நிலையில், 21 மணி நேரத்துக்கு பிறகு, கொலையான சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதித்தனர். இந்த விவகாரத்தில் சமரசம் இன்றி குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்