பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம் - காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன்
பங்குனி உத்திர திருவிழா, தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முருகக்கடவுளின் மூன்றாம் படைவீடான பழனியில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதனையொட்டி, பழனியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பாதயாத்திரையாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒரு சில பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து, கோலாட்டம் ஆடியபடி பழனிக்கு வந்தனர். பங்குனி உத்திர தேரோட்டத்தை பார்க்க குவியும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.