சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்களை பரப்பினால் 3 ஆண்டு வரை சிறை - செந்தில்குமார்

"உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவது குற்றம்"

Update: 2019-03-21 00:32 GMT
தந்தி டி.வி. லோகோவை, சிலர் போலியாக பயன்படுத்தி அதன் மூலம் தந்தி டிவி செய்திகளில் வெளியாகாத விவரங்களை அவதூறான வகையில் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக தெரிய வந்துள்ளது. 

இதுதொடர்பாக தந்தி டி.வி. சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு புகார் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட உள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்தநிலையில், போலியான, உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வலைதளத்தில் பரப்புவோருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்