ஜாமினில் இன்று விடுதலையாகிறார் நிர்மலா தேவி
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலா தேவி நிபந்தனை ஜாமினில் இன்று வெளிவருகிறார்.
மாணவிகளை தவறாக வழிகாட்டியதாக பேராசிரியை நிர்மலா தேவி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மார்ச் 12ம் தேதியன்று அவருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் வழங்கியது. இதையடுத்து, அவரது சகோதரர் ரவியும், குடும்ப நண்பர் மாயாண்டியும் தலா10 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு பிரமாண பத்திரங்களை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து நிர்மலா தேவி இன்று ஜாமீனில் விடுதலையாகிறார். இந்த தகவலை அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். சிறையில் இருந்து வரும் நிர்மலா தேவி எங்கு வேண்டுமானாலும் தங்கலாம் எனவும் செய்தியாளர்களை சந்திக்க கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.