தமாகா நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் தம்பி காலமானார்
ஜி.ஆர்.மூப்பனார் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி
மறைந்த ஜி.கே. மூப்பனாரின் தம்பியும், தமாகா தலைவர் ஜி.கே. வாசனின் சித்தப்பாவுமான ஜி. ரெங்கசாமி மூப்பனார், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 83.இவர் தமாகா செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் காலமான அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.இதையடுத்து, சொந்த ஊரான கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தர பெருமாள் கோவிலுக்கு ஜி. ரங்கசாமி மூப்பனாரின் உடல் கொண்டு செல்லப்பட்டது.அங்கு நாளை மாலை 5 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பிறகு, ஜி.ஆர் மூப்பனாரின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது