உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை

அழுகிய நிலையில் 370 கிலோ பழங்கள் கைப்பற்றி அழிப்பு

Update: 2019-03-15 20:36 GMT
கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் கோவையில் பழ விற்பனை களைகட்டி வருகிறது. இந்நிலையில், கவுண்டர் வீதியில் விற்பனை செய்யப்படும் பழங்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் அழுகிய நிலையில் 370 கிலோ பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. கோடை காலத்தை முன்னிட்டு மாம்பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அவர்கள் எச்சரித்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்