புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை
சோதனையில் சிக்கிய 250 கிலோ புகையிலை பொருட்கள்
திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ போதை பொருட்கள்ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த இருவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்