பொள்ளாச்சி பாலியல் வழக்கு : பெண்ணின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தினால் நடவடிக்கை - கோவை ஆட்சியர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தேவையின்றி பெண்ணின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தினாலோ, வழக்கை திசை திருப்பும் விதமாக செயல்பட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் தெரிவித்தார்.

Update: 2019-03-12 08:39 GMT
காவல்துறையினரின் நடவடிக்கையில் தனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவையின்றி பெண்ணின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தினாலோ, வழக்கை திசை திருப்பும் விதமாக செயல்பட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்