தேவேந்திரகுல வேளாளர் என அழைப்பது தொடர்பான கோரிக்கை : அரசால் நியமிக்கப்பட்ட குழு விசாரணையை தொடங்கியது

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர்கள் என பட்டியலிடப்பட்டு உள்ள குடும்பன், பள்ளன், தேவேந்திரகுலத்தான், கடையன், பண்ணாடி மற்றும் காலாடி ஆகிய ஆறு சாதிகளையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குலுவேளாளர் என்று அழைக்க அரசுக்கு கோரிக்கை வரப்பெற்றது.

Update: 2019-03-07 19:34 GMT
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர்கள் என பட்டியலிடப்பட்டு உள்ள குடும்பன், பள்ளன், தேவேந்திரகுலத்தான், கடையன், பண்ணாடி மற்றும் காலாடி ஆகிய ஆறு சாதிகளையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குலுவேளாளர் என்று அழைக்க அரசுக்கு கோரிக்கை வரப்பெற்றது. இதனைத் தொடர்ந்து அதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். கூடுதல் தலைமை ​செயலாளர் ​ஹ​ன்ஸ்ராஜ் வர்மா தலைமையிலான  அந்த குழு இன்று, சென்னை ஆதிதிராவிடர் நல இயக்ககத்தில் தனது முதல்  விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த குழுவின் முன் ஆஜராகி ம.தங்கராஜ், முனைவர் எஸ்.சுமதி, முனைவர் ப.சுப்பிரமணியம், ஓய்வுபெற்ற ஆட்சிப்பணி அதிகாரி கிருஷ்துதாஸ் காந்தி, அக்னி சுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைத்ததாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்