நாடாளுமன்ற தேர்தலில் போட்டி : மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்வம்

1,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

Update: 2019-03-07 19:12 GMT
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. இதுவரை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும், விரைவில் நேர்காணல் நடத்தி தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்