கள்ள உறவுகள் அதிகரிக்க எது காரணம்?
கள்ளக் காதல் சம்பவங்கள், அதன் காரணமாக அதிகரிக்கும் குற்றங்கள் குறித்து சரமாரி கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து ஜூன் 21-க்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
* கடந்த 2017-ம் ஆண்டு கள்ளக் காதல் விவகாரத்தில் கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அஜித்குமார் என்பவர், தம்மீதான குண்டர் சட்ட சிறை தண்டனையை எதிர்த்து மனுதாக்கல் செய்தார்.
* இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வு, அஜித்குமாரை சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்தது.
* அப்போது, திருமணத்தை தாண்டிய உறவு ஆபத்தான சமூக தீங்கு என கருத்து தெரிவித்த நீதிபதிகள், கள்ளத் தொடர்பு சம்பந்தமான குற்றங்கள் அதிகரிக்க டிவி சீரியல்களும், திரைப்படங்களும் காரணமா? என வினவினர்.
* பாலியல் பிரச்னைகள் காரணமாக கள்ள உறவு ஏற்படுகிறதா என்ற கேள்வி எழுப்பிய அவர்கள், இதற்கு, தொலைக்காட்சி தொடர்களும், திரைப்படங்களும் காரணமா என மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
* இந்த விவகாரத்தில் ஆந்திரா முதலிடத்தில் இருப்பதாக கூறிய நீதிபதிகள், கள்ளக் காதலில் ஈடுபட்டுள்ளோருக்கு சீரியல்களும், திரைப்படங்களும் வழிகாட்டுகின்றனவா என்றனர். திருமணத்தை தாண்டிய உறவுக்கு காரணம் பொருளாதார சுதந்திரமா, பால்உறவு போதாமையா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து ஜூன் 21ம் தேதி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.