பிரியாணி கடையை ஜப்தி செய்த மாநகராட்சி அதிகாரிகள் : வாடகை செலுத்தாததால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈரோட்டில் வாடகை செலுத்தாத பிரியாணி கடை ஒன்றை மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஜப்தி செய்துள்ளனர்.

Update: 2019-03-05 21:13 GMT
ஈரோட்டில் வாடகை செலுத்தாத பிரியாணி கடை ஒன்றை  மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஜப்தி செய்துள்ளனர். ஈரோடு பேருந்து நிலையத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பிரியாணி கடை நடத்தி வந்த ரகுநந்தன் என்பவர் நீண்ட நாட்களாக கடைக்கு வாடகை செலுத்தாமல் கடையை நடத்தி வந்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடையை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து மாநகராட்சி உதவி ஆணையர் குமரேசன் தலைமையில் அங்கு சென்ற அதிகாரிகள் அங்கிருந்த பொருட்களை ஜப்தி செய்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்