"என் மீது எந்த தவறும் இல்லை" - ஆபாசபடம் எடுத்த குற்றவாளி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாசபடம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளி திருநாவுக்கரசை போலீசார் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாசபடம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளி திருநாவுக்கரசை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள, வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், தன் மீது எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ள திருநாவுக்கரசு, எந்த பெண் புகார் செய்திருந்தாலும் அந்த பெண் மூலமே தமக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளான்.