கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை : மதுக்கடைக்கு எதிராக ஒன்று திரண்ட பெண்கள்
பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மூடப்பட்ட மதுக்கடை
கும்மிடிப்பூண்டி அருகே கிராமம் ஒன்றில் குடியிருப்புகளின் மத்தியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை, பெண்கள் பத்தே நிமிடத்தில் அதிரடியாக மூடச்செய்தனர். குருவராஜகண்டிகை கிராமத்தில் குடியிருப்புகள் மத்தியிலும், கோவில்கள் அருகேயும் புதிதாக அரசு மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இதனையறிந்த அப்பகுதியில் குடியிருக்கும் பெண்கள் திடீரென அங்கு திரண்டனர். அனைவரும் ஒன்று சேர்ந்து கடையை மூடும்படி வலியுறுத்தினர். வீடுகளுக்கு மத்தியில் மதுக்கடையை எப்படி திறக்கலாம்? என அவர்கள் கோஷம் போட்டனர். இதனையடுத்து மதுக்கடையில் இருந்த விற்பனையாளர்கள், தாமாகவே முன்வந்து, கடையை மூடி விட்டு அங்கிருந்து புறப்பட்டனர். புதிதாக மதுபான கடை திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் பெண்கள் ஒன்று திரண்டு அதை மூட வைத்த சம்பவம் அப்பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியது.